நட்பு தானே அமைவதா அல்லது தேடிக்கொள்வதா?
நட்பு தானே அமைவதா அல்லது தேடிக்கொள்வதா?
நெஞ்சத்து நெகிழ்ச்சியில் நிகழ்வது நட்பு!
கருத்தொருமிதத்தில் வருவதல்ல நட்பு, ஆத்ம ஒருமிதத்தில் வருவதே நட்பு
வாழ்க்கை நெளிவு வளைவுகளை தாண்டிய நெருக்கம் நட்பு
வாழ்க்கை புதிரை வெற்றிகரமாக சமாளிக்க உதவும் திறன் நட்பு
வாழ்க்கை கடலின் நம்பிக்கை படகு தகரும் போது கரை சேர்க்கும் கை நட்பு
வாழ்க்கை நெடிது, கொடிது என்று உணரும் நிமிடங்களை இனிது, நொடித்தாக்குவது நட்பு
ஆடி பாடி கூடி கலைவதல்ல நட்பு, தொலையும் போது வாடி, தேடி, நாடுவதே நட்பு!
உயிரின் இறுதி நிமிடத்தை நிம்மதி ஆக்கும் நினைவு நட்பு
அந்த நட்பு தானே அமைவதா அல்லது நாம் தேடிக்கொள்வதா?
மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு மட்டுமல்ல, நட்பும் தான்

Comments
Post a Comment